"ச்சை! நானும் பாத்துட்டு இருக்கேன்..எப்ப பாரு, சாப்பாடு வச்சுட்டு வச்சுட்டு அத வாங்கணும், இத வாங்கணும் ன்னு, எதையாது சொல்லிட்டே இருக்க? அதும் நீ எப்பயும் வைக்கிற இந்த கல்லு இட்லியைக் கொடுத்துட்டு" என்று அமுதன் இரண்டு மூன்று சொற்களைத் தூக்கி எறிந்தான்; குமுதாவிடம் இருந்து வந்து கொண்டிருந்த தொடர் பேச்சை நிறுத்துவதற்கு.. "ஆங், நா என்னமோ எனக்கு சேலை, நெக்லஸ் கேட்ட மாறி என்ன ஏன் கடிக்கிறீங்க?" என்று அவள் விருப்பத்தையும் அள்ளி போட்டுக்கொண்டு, "கவினுக்கு தா கேக்குறேன்; அவன் தா பக்கத்து வீட்டு எழில் வச்சிருக்குற சைக்கிள் மாதிரி இவனுக்கும் வேணும் ன்னு கேட்டு அடம் பிடிக்குறான்" "சைக்கிளா? இவனுக்கு தா நாம போன வாரம் சரவண ஸ்டார் ல வாங்கி குடுத்தோம்ல! பின்ன என்ன சைக்கிளு? " "ஏங்க! அதுல ஜோட்ட பீம் படம் இல்ல..எழில் சைக்கிள இருக்கு, அத பாத்து தா கேக்குறான்" "நீ தான்டி இவனை டிவி, போனு ன்னு கொடுத்து கெடுத்து வச்சிருக்க!" என்று குரலை உயர்த்தினான்.. "ஆ, எல்லாத்துக்கும் என்னையே குத்தம் சொல்லுங்க, உங்கள பாத்து தான் இ...