Skip to main content

Posts

Showing posts from September, 2018

"ஒரு சிப்பியில் விளைந்த இரு முத்துக்கள்"

ஒரு சிப்பியில் விளைந்த இரு முத்துக்களைப் போல் கருவில் இரண்டாய் உருவானோம்.. பந்தலில் படரும் கொடிகளைப் போல பிணைந்தே உருப்பெற்றோம்.. சிறு இடைவெளி கூட இல்லாமல் கருவில் சேர்ந்திருந்த நாம் சில நிமிட இடைவெளியில் வெளி வந்தோம் உலகிற்கு.. தாயும் உணவு என அவள் குருதியை உணவாக்கி சமமாய் ஊட்டி வளர்த்திட்டாள்.. தந்தையும் என்றுமே அவர் இரு கண்ணென காத்திட்டர் சமமாய் அன்பையும் பொழிந்திட்டார்.. அண்ணனும் பெற்றிட்டான அவன் இணைப்பிரியா இரு நண்பர்களை ஒரு சேர.. சுற்றாரும் கொண்டாடினார்கள் இரட்டை முத்துக்கள் பிறந்ததை எண்ணி.. கண்டவர்கள் யாவரும் நெகிழ்ந்தனர் இரட்டிப்பாகவே நாங்கள் இரட்டையர் என்பதாலே.. அழுகைச் சேர்ந்த தொடங்கியாதலோ எப்போதும் அதுச் சேர்ந்தே வரக் கண்டோம்.. எனக்கு உடல் நலம் சரியில்லை என்றால் அது உனக்கும் பரவிடுமோ காற்று பரவுவது போல.. பயின்றோம் போட்டி போட்டு அதானால் தேறினோம் தேர்வில் யாதும்.. இதயம் வேறு என்றாலும் உள் என்றும் ஒன்றே நினைத்திட்டோம்.. உணர்ச்சி வேறு என்றாலும் எப்போதும் உணர்வுகள்  ஒன்றெனக் கொண்டோம்.. துன்பம் வந்த போது அதை இரண்டாய்ப்...