ஒரு சிப்பியில் விளைந்த இரு முத்துக்களைப் போல் கருவில் இரண்டாய் உருவானோம்..
பந்தலில் படரும் கொடிகளைப் போல பிணைந்தே உருப்பெற்றோம்..
சிறு இடைவெளி கூட இல்லாமல் கருவில் சேர்ந்திருந்த நாம் சில நிமிட இடைவெளியில் வெளி வந்தோம் உலகிற்கு..
தாயும் உணவு என அவள் குருதியை உணவாக்கி சமமாய் ஊட்டி வளர்த்திட்டாள்..
தந்தையும் என்றுமே அவர் இரு கண்ணென காத்திட்டர் சமமாய் அன்பையும் பொழிந்திட்டார்..
அண்ணனும் பெற்றிட்டான அவன் இணைப்பிரியா இரு நண்பர்களை ஒரு சேர..
சுற்றாரும் கொண்டாடினார்கள் இரட்டை முத்துக்கள் பிறந்ததை எண்ணி..
கண்டவர்கள் யாவரும் நெகிழ்ந்தனர் இரட்டிப்பாகவே நாங்கள் இரட்டையர் என்பதாலே..
அழுகைச் சேர்ந்த தொடங்கியாதலோ எப்போதும் அதுச் சேர்ந்தே வரக் கண்டோம்..
எனக்கு உடல் நலம் சரியில்லை என்றால் அது உனக்கும் பரவிடுமோ காற்று பரவுவது போல..
பயின்றோம் போட்டி போட்டு அதானால்
தேறினோம் தேர்வில் யாதும்..
தேறினோம் தேர்வில் யாதும்..
இதயம் வேறு என்றாலும் உள் என்றும் ஒன்றே நினைத்திட்டோம்..
உணர்ச்சி வேறு என்றாலும் எப்போதும் உணர்வுகள் ஒன்றெனக் கொண்டோம்..
துன்பம் வந்த போது அதை இரண்டாய்ப் பிரித்துக் குறைத்துக்கொண்டோம்..
மகிழ்ச்சி வரும் போது அதைப் பகிர்ந்து இரட்டிப்பாக்கினோம்..
அன்பையும் பகிர்ந்திட்டோம் அதைப் பிறருக்கும் கொடுத்தே மனம் மகிழ்ந்தோம்..
மனக்கசப்பு வந்தாலும் அது எடுத்துக் கொண்டது அரை நிமிடமே தான்..
உடல் இருப்பது தூரம் என்றாலும் மனம் இருப்பது நெருங்கியே தான்..
இரு வேறு ஆசைகள் கொண்டாலும் நிறைவேற்ற எண்ணிட்டோம் முதலில் நம்முள் பிறரின் ஆசையைத் தான்..
இரட்டையர் என்பதாலே நான் இழந்தது ஏதும் இல்லை.நான் பெற்றதே மிக அதிகம்..
இரட்டையர் என்பதாலே நீ இழந்தது சில இருக்கு.அதில் முதன்மை உன் கனவு..
என்னால் நடந்ததனால் அதைப் போக்கிட தவித்ததுண்டு.ஆனால் போக்கிட பாடில்லை.அந்த குற்ற உணர்வு இன்னுமுண்டு.
நீ கிடைத்தது எனக்கு பெருமை ஆகும். உன்னைப் பிரிந்து இருப்பதே பெருந்துயராகும்..
உலகில் அரிதாய்ப் பிறந்திட்டோம் உலகில் உள்ள சொற்ப இரட்டையர்களின் நாமும் இரட்டையராய்..
பிரிவு வந்து போகும் ஆனால் அது ஒருவரென்றால் பாதிப்புக்குள்ளாக்கும்.
நாம் இரட்டையர் என்பதால் அது நம்மைக் கண்டு தூரம் போகும்..
அன்பைப் பெற்றோம் இரட்டிப்பாக,
அதை யாவர்க்கும் பகிர்ந்தோம் இரட்டிப்பாக, நற்பண்பையும் பெற்றோம் இரட்டிப்பாக, அதன் வழியே நடந்தோம் மகிழ்வாக, ஆதலால் என்றும் வாழ்வோம் சிறப்பாக, அதை நீ மட்டும் மனதில் வைத்துக்கொள் உறுதியாக..!!
~இராசை இராம்

Comments
Post a Comment