பெரியார் நிகழ்த்திச் சென்றுள்ள ஆக்கப்பூர்வமான புரட்சிகள், பெண்கள் இன்றும் என்றும் போற்றும் வண்ணம் சமூகத்தில் அவர் முன்வைத்து போராடி அவர்களுக்கு கொண்டு வந்த சீர்திருத்தங்களைப் பற்றிய கட்டுரை அல்ல. முதலில் இது கட்டுரையே அல்ல. பெரியாரைப் பற்றி நான் முன்வைக்கும் கருத்து. அவர் சொன்னதைப் போல் இதை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் புத்திக்குட்பட்டது. பெரியார் எனும் கருத்தியல்: பெரியாரைத் தலைவர் என்றளவில் நிறுத்தி விட நம்மால் முடியாது. தலைவர் என்றால் போற்றப்படுவார் (அ) மறுசாராரால் தூற்றப்படுவார்; இன்றளவும் கடைபிடிக்கவல்ல கொள்கையாகவும், பல கோணங்கள் உள்ள விவாதப் பொருளாகவும், தொலைநோக்கு பொதிந்த ஆராய்ச்சிக் கூறாகவும் இருந்து வரும் அவரரை ஒரு கருத்தியலாகவே பார்க்க வேண்டும். அப்படிறென்றால் விவாதப் பொருளாகும் யாவரும் கருத்தியல் தான எழும் கேள்விக்குப் பதில் அதன் பொருளடக்கத்திலே கிடைத்துவிடும். கருத்தியல் என்ன செய்யும்? கருத்தியல் சமூகத்தின் மீதான பார்வையை நுண்ணோக்கச் செய்யும், உலகப் பார்வைக்கு நம்மை விசாலப்படுத்தும், நெறி சார்ந்த சிந்தனைகள் ஊடாகவும் மா...