போராட்டங்கள் என்பது எப்போதும் ஆக்கப்பூர்வமானதாக இருத்தல் வேண்டும். அது மட்டுமே அதன் நோக்கத்தினை நிறைவேற்றும் பாதைக்கு வழி நடத்திச் செல்லும். அறிவுசார் சமூகத்தினால் தான் அறஞ்சார் சமூகமாக வாழ்தல் முடியும். அறிவுசார் சமூகம் பெற்றிட கல்வி ஒன்றே முதன்மையான மூலதனம். அக்கல்வியைப் பெருஞ்சமூகம் பெற்றிடக் கூடாதென வன்மமாகவே ஒரு பிரிவினர் தடுத்து வந்துள்ளனர். பல ஒடுக்குமுறைகளைத் தாண்டி பெற்ற கல்வி ஒரு மனிதனை எந்த நிலைக்கு உயர்த்தும் என்பதற்கான எடுத்துக்காட்டாய் இச்சமூகத்திற்கு வாழ்ந்தமைந்தவர் தான் அண்ணல் அம்பேத்கர். அப்படி ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தடுக்கப்பட்டது யாவும் கிடைக்கப்பெற வழி செய்தலே சமூக நீதியெனும் அறமாகும் . அச்சமூகநீதிப் போராட்ட முன்னெடுப்புகளில் விளைந்த பயிர்களின் விளிம்பில் இருந்துவிட்டு உங்களின் வேர்களைப் பற்றி அறியாது, பிதற்றிக் கொண்டு, உங்கள் வருங்கால தலைமுறையினர் தளிர்களுக்கு நீங்களே களையாகி பட்டுப்போய் விடாது ; வேர்களைப் பற்றி அறிய முனைந்திடுக. அம்பேத்கர் உங்கள் வாழ்வு சற்று துளிர் விட வழி செய்த வேர்களில் ஒருவர். அ...
பெரியார் நிகழ்த்திச் சென்றுள்ள ஆக்கப்பூர்வமான புரட்சிகள், பெண்கள் இன்றும் என்றும் போற்றும் வண்ணம் சமூகத்தில் அவர் முன்வைத்து போராடி அவர்களுக்கு கொண்டு வந்த சீர்திருத்தங்களைப் பற்றிய கட்டுரை அல்ல. முதலில் இது கட்டுரையே அல்ல. பெரியாரைப் பற்றி நான் முன்வைக்கும் கருத்து. அவர் சொன்னதைப் போல் இதை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் புத்திக்குட்பட்டது. பெரியார் எனும் கருத்தியல்: பெரியாரைத் தலைவர் என்றளவில் நிறுத்தி விட நம்மால் முடியாது. தலைவர் என்றால் போற்றப்படுவார் (அ) மறுசாராரால் தூற்றப்படுவார்; இன்றளவும் கடைபிடிக்கவல்ல கொள்கையாகவும், பல கோணங்கள் உள்ள விவாதப் பொருளாகவும், தொலைநோக்கு பொதிந்த ஆராய்ச்சிக் கூறாகவும் இருந்து வரும் அவரரை ஒரு கருத்தியலாகவே பார்க்க வேண்டும். அப்படிறென்றால் விவாதப் பொருளாகும் யாவரும் கருத்தியல் தான எழும் கேள்விக்குப் பதில் அதன் பொருளடக்கத்திலே கிடைத்துவிடும். கருத்தியல் என்ன செய்யும்? கருத்தியல் சமூகத்தின் மீதான பார்வையை நுண்ணோக்கச் செய்யும், உலகப் பார்வைக்கு நம்மை விசாலப்படுத்தும், நெறி சார்ந்த சிந்தனைகள் ஊடாகவும் மா...