ஓராண்டு கழிந்துவிட்டது காற்றில் கலந்தது கனவு என்று சொல்லி ஒன்றும் செய்யாமல் நகர்ந்து கொண்டே இருக்கிறோம் ஊமைகளாக. நீ ஏந்திக்கொண்ட சுடரினை விளக்கினில் ஏற்ற முடியாத மூடர்களாவே இன்றும் இருக்கிறோம். நீ கொண்ட நோக்கத்தினை அடைய முயற்சி பல செய்தாய் அது சுயநலவாதிகளின் சூழ்ச்சியால் தகர்ந்துப் போகவே உன் உயிரையே ஆயுதமாக்கினாய் அநீதிகளுக்கு எதிராக. காற்றில் கலந்து உன் கனவு மட்டுமே காலத்தில் கலந்து விட்டது உன் வாழ்வே சமூக நீதிக்கொரு பெயராக என்றும் அனிதா இருக்கும். இன்றளவும் உன்னை அரசியல் லாபத்திற்கு அடமானம் செய்கின்ற பலர் இருக்கின்றனர் அற்ப பதறுகளாக. நீ தந்து சென்ற அறிவையும் பயன்படுத்தாமல் போராட்டத்தையும் கண்டுகொள்ளாமல் தியாகத்தையும் நினைக்காமல் சிலரைத் தவிர்த்து பலர்சென்றுகொண்டிருக்கிறோம் பேதைகளாகவே. இந்த நாள் ஆண்டுக்கு ஆண்டு வரப்போகிறது. இன்றளவு மட்டும் எண்ணி விட்டு இவ்வாறே கடந்து செல்ல தான் போகிறோமா? ஆட்சியில் மாற்றம் வந்து விட்டால் இந்த அநீதி மாறிவிடுமா?ஆட்சி மாறினாலும் அநீதியை மாற விடுவார்களா? இதிலுள்ள அரசியல் கட்சிகளுகிடையே ஆனதா? ...