Skip to main content

"காற்றில் கலையப் போகிறோமா"


ஓராண்டு கழிந்துவிட்டது
காற்றில் கலந்தது கனவு என்று
சொல்லி ஒன்றும் செய்யாமல் நகர்ந்து கொண்டே இருக்கிறோம் ஊமைகளாக.

நீ ஏந்திக்கொண்ட சுடரினை
விளக்கினில் ஏற்ற முடியாத
மூடர்களாவே  இன்றும் இருக்கிறோம்.

நீ கொண்ட  நோக்கத்தினை அடைய முயற்சி
பல செய்தாய் அது சுயநலவாதிகளின் சூழ்ச்சியால்
தகர்ந்துப் போகவே உன் உயிரையே ஆயுதமாக்கினாய் அநீதிகளுக்கு எதிராக.

காற்றில் கலந்து உன் கனவு மட்டுமே
காலத்தில் கலந்து விட்டது உன் வாழ்வே
சமூக நீதிக்கொரு பெயராக என்றும் அனிதா இருக்கும்.

இன்றளவும் உன்னை அரசியல் லாபத்திற்கு
அடமானம் செய்கின்ற  பலர் இருக்கின்றனர்
அற்ப பதறுகளாக.

நீ தந்து சென்ற அறிவையும் பயன்படுத்தாமல்
போராட்டத்தையும் கண்டுகொள்ளாமல்
தியாகத்தையும் நினைக்காமல் சிலரைத் தவிர்த்து பலர்சென்றுகொண்டிருக்கிறோம் பேதைகளாகவே.

இந்த நாள் ஆண்டுக்கு ஆண்டு வரப்போகிறது.
இன்றளவு மட்டும் எண்ணி விட்டு இவ்வாறே கடந்து செல்ல தான் போகிறோமா?

ஆட்சியில் மாற்றம் வந்து விட்டால் இந்த அநீதி மாறிவிடுமா?ஆட்சி மாறினாலும் அநீதியை மாற விடுவார்களா?
இதிலுள்ள அரசியல் கட்சிகளுகிடையே ஆனதா?

இது வெறும் தேர்தல் அரசியல்  அல்ல என்பதை முதலில் உணர்க.
இது ஆதியில் இருந்து தொடர்ந்து வரும் அதே சமூக ஆதிக்க அடக்கு முறை தான்.

அதை வெளிக்கொணர்ந்து அதை எதிர்த்து எடுக்கும் நடவேடிக்கைகளே முற்போக்கான நடைமுறையில் மாற்றத்தைத் தருவதாக இருக்கும்.

அதுவே அநீதிகளை அறவே அறுத்து அனிதாக்களைப் பேணுவதாக இருக்கும்.அதை விடுத்து நாம் மேற்கொள்பவைகள் பயனளிக்காது நம்மை காற்றில் கலையச் செய்வதாகத் தான் இருக்கும்.
                                             
                                                ~இராசை இராம்

Comments

Popular posts from this blog

என்ன எழுதுவது?

என்ன எழுதுவது உன்னைப் பற்றி? கதையா, கட்டுரையா, கவிதையா? என்ன எழுதினாலும் அவற்றை முடித்து விட முடியுமா? எங்கேயிருந்து தொடங்குவது, நான் தொடங்குவது தான் தொடக்கமா இருக்குமா? சொல்ல நினைப்பதை எழுத்துக்களில் கொண்டு வந்து விட முடியுமா? இல்லை, சொல்ல நினைப்பதைத் தான் இது தானென்று என்னால் வரையறுக்க முடியுமா? ஒருவேளை எழுதி முடித்த பின், எழுதிய திருப்தி கிடைத்திடுமா? ஏன், நீ மட்டும் இப்படி எனக்காக? இன்னும் எண்ணற்ற கேள்விகள், என்னிலே உன்னை எழுதத் தொடங்க  நினைத்தாலே எழுகிறது. தோல்வி தான் கிட்டும் உன்னைப் பற்றி எழுத நினைத்தால்; தோல்வியை யார் தான் விரும்புவார். இருப்பினும் ஏற்கிறேன், முயல்கிறேன். ஒருவர் இயங்கிட தேவையானக் கூறனைத்தும் தந்திடவல்ல இயக்கோன்.. அன்பின் அறத்தின் வழி பிறழா நின்று பழிச்சுமை கொண்டோன்.. உன் இழப்பினால் என் இழப்பினைத் தவிர்த்து நின்றோன்.. நீ அடையாப் போனவற்றையும் யாம் அடைய வழி செய்தோன்.. நிகழ்வை, நம்பிக்கையை, தோல்வியை நோக்கும் கண்ணோட்டத்தினைக் கற்றுகொகொடுத்தோன்.. நடைமுறை புரிந்துணர்வினை எண்ணில் விதைத்திட்டோன்.. ...
கயல் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவள். திருவிழாவிற்கு ஊருக்கு வந்தவள் , வீட்டிற்கு வந்து சிறு தூக்கம் கொண்டு பேருந்தில் கொண்டு வந்த அலுப்பையெல்லாம் முடித்து விட்டு , சென்னையில் நடந்த சில நிகழ்வுகளைச் சொல்லி , காலை உணவையெல்லாம் முடித்த விட்டு ஊர்காரியாக மாறியப் பின் , மகள் வந்திருப்பதால் அவளுக்கு பிடித்தத்தைச் செய்ய வேண்டுமென சமையலில் மூழ்கியிருந்த அம்மாவிடம் , " அம்மா! சிறுகிழங்கு , கேரட் பொரியல் தான சரியா ? " என்று மாதுளைச் சாரைக் குடித்து முடித்து விட்டு சமைக்கக் கழுவி வைத்திருந்த கேரட்டைக் கடித்தபடி கேட்கிறாள். " ஆமா அதுவும் தான்" என கன்னத்தில் செல்லக் கிள்ளலுடன் சிறுபுன்னகையுடன் வருகிறது பதில்.. " சரிமா , வீட்டுக்கு வர வழில பாத்தேன் , திருவிழா போஸ்டருலலாம் கமிட்டி தலைவர் ன்னு குமார் பேரைப் போட்டுருக்காங்க ? கருப்பசாமி அவருக்கு என்னாச்சு ? எப்பயும் கருப்பசாமி தான இருப்பாரு!" கருப்பசாமி அந்த ஊரில் பெரிய மளிகைக்கடைக்காரர் ; மூன்று தலைமுறை கடந்து இயங்கி வருகிறது அந்தக் கடை. அதனாலே மளிகை கருப்பசாமி என்பது பெயரானது. நி...

அண்ணல் ஒரு ஆக்கப்பூர்வமான போராட்ட வழிமுறை

  போராட்டங்கள் என்பது எப்போதும் ஆக்கப்பூர்வமானதாக இருத்தல் வேண்டும். அது மட்டுமே அதன் நோக்கத்தினை நிறைவேற்றும் பாதைக்கு வழி நடத்திச் செல்லும்.  அறிவுசார் சமூகத்தினால் தான் அறஞ்சார் சமூகமாக வாழ்தல் முடியும். அறிவுசார் சமூகம் பெற்றிட கல்வி ஒன்றே முதன்மையான மூலதனம்.  அக்கல்வியைப் பெருஞ்சமூகம் பெற்றிடக் கூடாதென வன்மமாகவே ஒரு பிரிவினர் தடுத்து வந்துள்ளனர்.   பல ஒடுக்குமுறைகளைத் தாண்டி பெற்ற கல்வி ஒரு மனிதனை எந்த நிலைக்கு உயர்த்தும் என்பதற்கான எடுத்துக்காட்டாய் இச்சமூகத்திற்கு வாழ்ந்தமைந்தவர் தான் அண்ணல் அம்பேத்கர்.  அப்படி ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தடுக்கப்பட்டது யாவும் கிடைக்கப்பெற வழி செய்தலே சமூக நீதியெனும் அறமாகும் .  அச்சமூகநீதிப் போராட்ட முன்னெடுப்புகளில் விளைந்த பயிர்களின் விளிம்பில் இருந்துவிட்டு  உங்களின் வேர்களைப் பற்றி அறியாது, பிதற்றிக் கொண்டு, உங்கள் வருங்கால தலைமுறையினர் தளிர்களுக்கு நீங்களே களையாகி பட்டுப்போய் விடாது ; வேர்களைப் பற்றி அறிய முனைந்திடுக.  அம்பேத்கர் உங்கள் வாழ்வு சற்று துளிர் விட வழி செய்த வேர்களில் ஒருவர். அ...