வெறுப்புகள் தினக்கூலியானது
தனிமையின் கூட்டநெரிசல் கண்டேன்
அன்பு கேள்விகளும் கேலியாய் உணர்ந்தேன்
சோற்றுப்பருக்கைகளும் எச்சரித்தனர்
தொலைக்காட்சி தொல்லையாய்த் தெரிந்தது
இரவின் ஒளி தூக்கங்களை விழுங்கியது
தெரியாத மனிதரின் பார்வைகளும் நெருடலாயானது
என் அறை மட்டுமே என் ஊரானது
கைபேசி அழைப்புகள் தயக்கத்தைத் தந்தது
விளையாட்டு விருப்பமில்லாத ஒன்றாயானது
பகலின் வெளிச்சம் இருளைக் கொடுத்தது
அலைச்சலின் அழையா விருந்தாளியானேன்
மின்னஞ்சல்களை எதிர்பார்த்து எதிர்காலம் என்றிருந்தேன்
எண்ணங்களில் வறுமை கொண்டிருந்தேன்
ஏமாற்றங்களை எதர்த்தமாய்ப் பழகிக்கொண்டேன்
விழாக்காலங்களும் விரக்தி அளித்தது
முதல்முறை அப்பா கொடுத்தக் காசு கடனாய்த் தெரிந்தது
வாழ்வின் மறக்க முடியாத அனுபவங்களையும்
வாழ்வின் எதிர்பாரா வினோதங்களையும்
மனிதர்களின் பல முகங்களையும் அனுபவித்து
கற்றுக்கொண்ட நாட்கள்.
வாழ்வின் எதிர்பாரா வினோதங்களையும்
மனிதர்களின் பல முகங்களையும் அனுபவித்து
கற்றுக்கொண்ட நாட்கள்.
பொறுமையை விதையாக்கி நாளும் முயற்சியை நீராக ஊற்றி வந்தால் யாவும் விருட்சம் ஆகும் என்பதை உய்த்துணர்ந்த நாட்களும் அதுவே.
~இராசை இராம்
~இராசை இராம்
Super da.....pinnita
ReplyDelete👍
Delete