பக்கத்து வீட்டுக்காரர்களான தீக்குச்சிக்கும் மெழுவர்த்திக்கும் இடையே காதல் மலர்ந்தது..
சாதி மதம் இனம் கடந்த உன்னத காதல் அது..
களிப்பாய்க் காலங்களைக் காதலில் கழித்துக் கொண்டிருந்தன இருவர்..
இவர்கள் காதல் பிரிவினைவாதிகளாக ஆக்கப்பட்ட மனிதர்கள் சிலருக்கு தெரிய வந்தது..
இந்த காதல் அனைவருக்கும் தெரிந்து விட்டால் இருவரையும் கொன்று விடுவார்கள் என்று தீக்குச்சி ஐயமுற்றது..
இந்த மனநிலையில் தவித்து கொண்டிருந்த தீக்குச்சி மெழுகுவர்த்தியிடமும் கலந்தாலோசிக்காமல் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்தது..
இந்த காதலால் மெழுகுவர்த்திக்கும் ஒன்றும் தீங்கு வந்து விட கூடாது; அதனால் தன்னையே மாய்த்துக் கொள்வது என்று துணிந்தது..
இருவரில் ஒருவராவது வாழட்டும் என்பதால், அதுவும் மெழுகுவர்த்தியை விட்டு விடுவதாகவும் அதன் வாழ்வு பிரகாசமாக இருக்கும் என்று மனிதர்கள் சொன்னதையும் மனதில் கொண்டு;
தன்னைக் கொளுத்த ஒப்புக்கொண்டது, மனிதர்களிடம்..
தன்னைக் கொளுத்த ஒப்புக்கொண்டது, மனிதர்களிடம்..
அவர்களும் கொளுத்தி விட்டார்கள்; மெழுகுவர்த்தி இருப்பதைக் கண்டு கடந்துகொண்டு இருந்த தீக்குச்சியின் இறுதி நொடிகள்..
ஆனால் இந்த மனிதர்கள் எப்படியேனும் இருவரையும் கொன்று விடுவார்கள் என்பதை மெழுகுவர்த்தி முன்னமே அறிந்திருக்கிறது,
ஆனால் தன்னை முதலில் மாய்த்துக்கொண்டால் தனிமையில் தீச்குச்சி தவித்து துடித்து இறப்பதை விரும்பாமல் அமைதி காத்து விட்டது..
நான் உயிரோடாவது இருப்பேன் என்ற பொய் மகிழ்வையாவது என்னால் தீக்குச்சிக்குக் கொடுக்க முடிந்தது என்று மௌனம் காத்த மெழுகுவர்த்தி, தீக்குச்சியின் கடைசி நொடியில் தானும் உடன்கட்டை ஏறியது...
காரிருளை கிழித்து அழகாய் தோன்றியது ஒரு காதல் ஜோதி. மெழுகுவர்த்தியின் ஒவ்வொரு அணுவும் உருகியது அவர்களின் காதல் தீயில்..!
இந்த காதலை அழிப்பதில் அந்த மனிதர்களுக்கு என்ன கேடு கெட்ட விருப்பம் என்று தெரியவில்லை..
இவர்கள் காதலை முடித்த அடுத்த நொடியில் அடுத்த காதலை அழிக்க கிளம்பி விட்டனர்..
இவர்கள் காதலை முடித்த அடுத்த நொடியில் அடுத்த காதலை அழிக்க கிளம்பி விட்டனர்..

Comments
Post a Comment