Skip to main content

Posts

Showing posts from November, 2018

அழகிய காலம்

இரவு நேர வேளை பள்ளிபாடத்தை வேகமாக முடித்து; வந்து விடுவோம் தெருகளுக்கு.. வந்து விட்டார்கள் என சலித்துக் கொண்டு வீடுகளுக்குள் சென்று விடுவார்கள் வாசலில் வீட்டு கதை பேசும் அம்மாமார்கள், அத்தைமார்கள், பாட்டிமார்கள்.. ஒரு சில ரசிக்கும் திறன் கொண்டோரே அமர்ந்திருப்பார் வாசலிலே.. நாங்கள் அனைவரும் வந்துவிட்டோமா என்று சோதித்து விட்டு; வராதவர்களின் வீட்டிற்கு சென்று அவர்களின் வீடுகளில் சில பல திட்டுகள் காதுகளில் வாங்கிக்கொண்டும் அவர்களையும் கையோடு அழைத்து வந்து விடுவோம்.. பெரும்பாலும் கண்ணாமூச்சியே விளையாடிக் கழிப்போம்.. அடுத்தவர் வீடுகளுக்குள் அவர்களுக்கே தெரியாமல் ஒளிந்து கொள்வோம்.. பல முறை அந்த வீட்டுக்காரர்களிடம் சிக்கித் திட்டு வாங்கிக் கொண்டும், நிறைய நேரம் ஆகியும் நீ கண்டுபிடிக்காததால் தானாக வந்தாக சொல்லி வெளி வந்து விடுவோம்.. ஒருசில வீட்டுக்காரர்கள் ஒளிந்தது தெரிந்தும் கண்டுபிடிப்பவர் கேட்டால் யாரும் இல்லையே என்று சொல்லி விளையாட்டுக்குள் அவர்களும் சேர்ந்துகொள்வர்.. 10 மணி நெருங்கும் போது கண்டுபிடிக்க வருபவரை வர சொல்லிவிட்டு அனைவரும் வீட்டுக்குச் சென்று ...

"சுடலை மாடா"

காலை 9.45 மணிக்கு இனியன் அந்த இடத்தை அடைகிறான். வாசலில் சிலர் குழுவாகும், சிலர் இருவராகவும் நின்று தான் படித்ததைச் சொல்லிக்கொண்டும், பிறர் படித்ததை "அதெல்லாம் கேக்க மாட்டாய்ங்கடா... இதைத்தான் கேப்பாய்ங்க..." ன்னு பேசிக்கொண்டும், இன்னும் சிலர் தனியாக நின்று தன் கையில் இருந்த புத்தகத்தை முன்னும் பின்னும் புரட்டிக்கொண்டிருந்தனர்.. "மாப்ள படிக்கவே இல்லடா, புக்க எடுத்து இரண்டு பக்கங் கூட பாக்கல, அதுக்குள்ள தூங்கிட்டேன் டா" என்று சிலர் புளுகிக்கொண்டும், "போடா! இந்த நாய் இப்படி தான் சொல்லுவான்; ஆனா எல்லா பேப்பரையும் க்ளீயர் பண்ணிருவான், இவன் ஒரு புளுகு மூட்டை டா , இவன் கெடக்கான்டா..." என்று திட்டிக்கொண்டும் இருந்தனர். அனைவரின்  கண்களில் பரபரப்பு மட்டும் குறையாமல் நிறைந்திருந்தது... அவர்களில் சிலர் பேச்சுகளில் சில தயக்கங்களும், சிலர் பேச்சுகளில் ஆரவாரமும் இருந்தது... சிலர் யாரிடமும் பேசாமல் உள்ளே போய் என்ன செய்வது என்றும் தெரியாமல் ஒருவித பயம் கலந்த முகத்தோற்றத்துடன் நின்று கொண்டிருந்தனர். அதில் ஒருவனாக தானும் சேர்ந்து கொண்டான் இனியன்... ஆனால் அவனுக்கு...