என்ன எழுதுவது உன்னைப் பற்றி?
கதையா, கட்டுரையா, கவிதையா?
என்ன எழுதினாலும் அவற்றை முடித்து விட முடியுமா?
எங்கேயிருந்து தொடங்குவது, நான் தொடங்குவது தான் தொடக்கமா இருக்குமா?
சொல்ல நினைப்பதை எழுத்துக்களில் கொண்டு வந்து விட முடியுமா?
இல்லை, சொல்ல நினைப்பதைத் தான் இது தானென்று என்னால் வரையறுக்க முடியுமா?
ஒருவேளை எழுதி முடித்த பின், எழுதிய திருப்தி கிடைத்திடுமா?
ஏன், நீ மட்டும் இப்படி எனக்காக?
இன்னும் எண்ணற்ற கேள்விகள், என்னிலே உன்னை எழுதத் தொடங்க நினைத்தாலே எழுகிறது.
தோல்வி தான் கிட்டும் உன்னைப் பற்றி எழுத நினைத்தால்; தோல்வியை யார் தான் விரும்புவார். இருப்பினும் ஏற்கிறேன், முயல்கிறேன்.
ஒருவர் இயங்கிட தேவையானக் கூறனைத்தும் தந்திடவல்ல இயக்கோன்..
அன்பின் அறத்தின் வழி பிறழா நின்று பழிச்சுமை கொண்டோன்..
உன் இழப்பினால் என் இழப்பினைத் தவிர்த்து நின்றோன்..
நீ அடையாப் போனவற்றையும் யாம் அடைய வழி செய்தோன்..
நிகழ்வை, நம்பிக்கையை, தோல்வியை நோக்கும் கண்ணோட்டத்தினைக் கற்றுகொகொடுத்தோன்..
நடைமுறை புரிந்துணர்வினை எண்ணில் விதைத்திட்டோன்..
சொல்ல நினைத்ததை எனக்கு முடிந்த அளவு முயன்று இருக்கிறேன்..
இல்லை, இல்லை நான் முன்பே சொன்னதை மெய்ப்பிக்க எழுதியதே இது. என்னால் எழுத முடியாத, எழுதியும் முடிக்க முடியாதவனாயே என்றும் இருந்து விடு! அது போதும் எனக்கு! விரைவில் நன்மை விளையும்
பிறந்த நாள் நல்வாழ்த்துகள்ணா ❤️
மிகவும் கவர்ந்தது 😍
ReplyDeleteவேற லெவல்!! உண்மையிலே!! 🤝
ReplyDelete