நான் பெற்ற விருதுகள் பற்பல இருந்தாலும்
நான் பெற்ற முதல் விருது.
நான் பெற்றது விருது என அறியா
நாள் முதலே என்னை வந்தடைந்த விருது அது
நான் எண்ணும் எண்ணம் யாவும்
நன்கறிந்த விருதும் அதுவே
நான் இன்பம் துன்பம் பகிர
நாடும் முதல் விருதும் அவ்விருதே
நான் பெற்றது விருது என அறியா
நாள் முதலே என்னை வந்தடைந்த விருது அது
நான் எண்ணும் எண்ணம் யாவும்
நன்கறிந்த விருதும் அதுவே
நான் இன்பம் துன்பம் பகிர
நாடும் முதல் விருதும் அவ்விருதே
மகிழ்வைத் தர வந்த விருது அது
மற்றார் மனம் வருந்தா வண்ணம்
மனங்குளிர எப்பொழுதும் சுற்றதார்க்கு
மகிழ்வை மட்டும் தரவல்ல நற்விருது அது.
மற்றார் மனம் வருந்தா வண்ணம்
மனங்குளிர எப்பொழுதும் சுற்றதார்க்கு
மகிழ்வை மட்டும் தரவல்ல நற்விருது அது.
பகுத்தறிவை காட்டி என்
பார்வைதனை மாற்றி வாழ்வில்
பண்பட வைத்த விருது அது.
பார்வைதனை மாற்றி வாழ்வில்
பண்பட வைத்த விருது அது.
பழகிய நாள் முதலே இனம்புரியா
புரிதலுண்டு அதுவுடனே
பிறருக்கது புரிந்திடாது, அவ்விருது
புரிந்த செயலில் என்னை
பிரமிக்க வைத்து விட்ட விருது அது.
புரிதலுண்டு அதுவுடனே
பிறருக்கது புரிந்திடாது, அவ்விருது
புரிந்த செயலில் என்னை
பிரமிக்க வைத்து விட்ட விருது அது.
உற்ற கருத்தில் மாறுபாடு இருக்கும்
ஊரைச் சுற்றவில்லையெனில் கோபம் கொள்ளும் விருது அது
ஊரே சுற்றி எதிர்ப்பினும்
உடன் இருந்து ஊரை எதிர்க்கும் விருதும் அதுவே
ஊரைச் சுற்றவில்லையெனில் கோபம் கொள்ளும் விருது அது
ஊரே சுற்றி எதிர்ப்பினும்
உடன் இருந்து ஊரை எதிர்க்கும் விருதும் அதுவே
நட்பென்ற சொல்லிற்கு விளக்கமாய்
நிற்கும் விருது இரண்டு
நீங்கலான உறவிற்கு
நீண்டு வரும் விருதுகளும் அதுவே
நிற்கும் விருது இரண்டு
நீங்கலான உறவிற்கு
நீண்டு வரும் விருதுகளும் அதுவே
கேலி பல செய்தாலும்
கேள்வி எதும் கேட்காமல்
கேட்டதை உடனே செய்துதரும் விருது அது.
கேள்வி எதும் கேட்காமல்
கேட்டதை உடனே செய்துதரும் விருது அது.
விளையாட்டின் மூலம் சேர்ந்துப் பழகி
வெற்றிகள் பல பெற்று தந்து
விழாக்காலங்களில் கூடி மகிழச் செய்து
வெண்மையான உள்ளங்கள் கொண்ட
விருதுகளும் பலவுண்டு.
வெற்றிகள் பல பெற்று தந்து
விழாக்காலங்களில் கூடி மகிழச் செய்து
வெண்மையான உள்ளங்கள் கொண்ட
விருதுகளும் பலவுண்டு.
பள்ளிகளில் நான்
பெற்ற விருதுகள் இன்னும்
பல நூறு இருக்கு அவற்றைப்
பற்றி சொல்ல முனைந்தால்
பக்கம் யாவும் முடிந்து விடும். ஆதலால்
பணிவோடு மனதில் வைத்து
பொறுப்போடு எடுத்து செல்கிறேன் விருதுகளை.
பெற்ற விருதுகள் இன்னும்
பல நூறு இருக்கு அவற்றைப்
பற்றி சொல்ல முனைந்தால்
பக்கம் யாவும் முடிந்து விடும். ஆதலால்
பணிவோடு மனதில் வைத்து
பொறுப்போடு எடுத்து செல்கிறேன் விருதுகளை.
கல்லூரியில் கற்றுக்கொண்ட
கல்வியென்பது சொற்பமாயினும்
கண்டெடுத்த விருதுப்பல
காலமெல்லாம் உடன் வருது.
கல்வியென்பது சொற்பமாயினும்
கண்டெடுத்த விருதுப்பல
காலமெல்லாம் உடன் வருது.
சென்ற முதல் நாட்களிலே
சேர்ந்துக் கொண்ட விருதுகள் அது.
சென்று விட்ட இடம் வேறு வேறு என்றாலும்
சிரித்து மகிழ்ந்த நினைவை நாளும் தரும் விருது அதுவே
சேர்ந்துக் கொண்ட விருதுகள் அது.
சென்று விட்ட இடம் வேறு வேறு என்றாலும்
சிரித்து மகிழ்ந்த நினைவை நாளும் தரும் விருது அதுவே
சுற்றித் திரிந்த தினமெல்லாம்
சிறிதும் கூட பிரிந்திடாமல்
சூழ்ந்திருந்த விருதுகள் உண்டு.
சிறிதும் கூட பிரிந்திடாமல்
சூழ்ந்திருந்த விருதுகள் உண்டு.
வெற்றி தோல்விதனை சமமாக
வைத்துப் பார்க்கும் இயல்வு கொண்ட
வியந்து பார்த்த விருதுகள் உண்டு.
வைத்துப் பார்க்கும் இயல்வு கொண்ட
வியந்து பார்த்த விருதுகள் உண்டு.
இசையெனும் ஈர்ப்புதனால்
இணைந்து விட்ட விருது அது.
இன்பம் வந்த போதிலும் துன்பம்
இயைந்த போதிலும் உடன்
இருந்து ஆட்படுத்திய பெருமை கொண்ட விருது அது.
இணைந்து விட்ட விருது அது.
இன்பம் வந்த போதிலும் துன்பம்
இயைந்த போதிலும் உடன்
இருந்து ஆட்படுத்திய பெருமை கொண்ட விருது அது.
சிறிது காலம் பழகி விட்டு
சற்றும் கூட மறக்காத நினைவலைகள்
சிறுக சிறுக பல தந்து
சிந்தையெல்லாம் நிறைந்திருக்கும்
சிறப்பான விருதுகளும் பலவுண்டு.
சற்றும் கூட மறக்காத நினைவலைகள்
சிறுக சிறுக பல தந்து
சிந்தையெல்லாம் நிறைந்திருக்கும்
சிறப்பான விருதுகளும் பலவுண்டு.
எண்ணில் அடங்கா விருதுகள் பல
என்னை வந்து சூழ்ந்துகொள்ள
எல்லா விருதுக்கும் தகுதியென
என்னை நானும் சொல்ல மாட்டேன்.
எப்படியேனும் அத்தகுதிதனை
என்னிடத்தில் பெற்றுக்கொள்ள
ஏனைய முயற்சிகளை செய்திடுவேன்
எந்நாளுமே
என்னை வந்து சூழ்ந்துகொள்ள
எல்லா விருதுக்கும் தகுதியென
என்னை நானும் சொல்ல மாட்டேன்.
எப்படியேனும் அத்தகுதிதனை
என்னிடத்தில் பெற்றுக்கொள்ள
ஏனைய முயற்சிகளை செய்திடுவேன்
எந்நாளுமே
"தோழர்கள் அனைவருக்கும்
தோழமை தின வாழ்த்துக்கள்"
தோழமை தின வாழ்த்துக்கள்"

அருமை!
ReplyDeleteSuper Da....romba super ah irukudhu
ReplyDelete